மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடியதற்காக தலா 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது பிசிசிஐ.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 36 ரன்கள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவை  வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது.

உலகக்கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக ஆடி வருவதை அடுத்து, அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ஒவ்வொருவருக்கும் 50 லட்சம் ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது.

இதேபோல், கிரிக்கெட் பயிற்சியாளர் மற்றும் அணி நிர்வாகத்துக்கு 25 லட்சம் ரூபாயை பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலயாவில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா நாளை விளையாட உள்ளது.

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கடும் சவால் காத்திருப்பதாக இந்திய கேப்டன் மிதாலி ராஜ் கூறியிருப்பது குறிப்படத்தக்கது.