பிசிசிஐ புதிய தலைவராக சி.கே.கன்னா நியமனம்? 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய தலைவராக திரு.சி.கே.கன்னாவை நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மறுசீரமைப்பு தொடர்பான உத்தரவுகளை பின்பற்றாததால், தலைவர் மற்றும் செயலாளர் பதவியிலிருந்து அனுராக் தாக்கூர், அஜய் ஷிர்கே ஆகியோரை உச்ச நீதிமன்றம் நீக்கியது. பிசிசிஐ பணிகளை மேற்கொள்வதற்காக நிர்வாகிகள் குழு ஒன்றை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. அந்த நிர்வாகிகள் குழுவிற்கான உறுப்பினர்களை நியமனம் செய்ய மூத்த வழக்கறிஞர் அனில் திவான்  நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில், டெல்லி கிரிக்கெட் சங்க துணைத் தலைவரான சி.கே.கன்னாவை பிசிசிஐ தலைவராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்திய கிரிக்‍கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி, பிசிசிஐ தலைவராக நியமிக்‍கப்படுவார் என்ற தகவலும் ஏற்கெனவே ஏற்கெனவே வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்‍கது.