வங்கதேச கிரிக்கெட் வீரர் மீது மனைவி வரதட்சணை புகார் தெரிவித்துள்ளார். வரதட்சணை கேட்டு கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வங்கதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் மோசதேக் ஹூசைன் சைகாத். கடந்த 2013-ம் ஆண்டு முதல் தர மற்றும் ஏ அணியில் பங்கேற்ற அவர் 2016-ம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். 

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணியில் மோசதேக் ஹூசைன் சைகாத் இடம் பெற்றுள்ளார். இந்நிலையில் அவரது மனைவி சர்மின் சமிரா உஷா வரதட்னை புகார் தெரிவித்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாகவும் தற்போது வரதட்சணை கேட்டு வீட்டை விட்டு வெளியில் அனுப்பி துன்புறுத்துவதாக, அவரது புகார் கூறியுள்ளார். 

இருப்பினும் இந்த விவகாரம் தொடர்பாக அவர் கருத்து ஏதுவும் தெரிவிக்கவில்லை. ஹூசைனின் சகோதரர் மோசாபர் ஹூசைன் கூறுகையில் திருமணானதில் இருந்தே அவர்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு நிலவியதாகவும் தகவல் தெரிவித்துள்ளார். உஷாவின் புகார் விரைவில் விசாரிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.