Bangalore Open Challenger Indias Yuki Bhambri and Sumit Naagal progress in quarterfinals
பெங்களூரு ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி, மற்றும் சுமித் நாகல் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.
பெங்களூரு ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பாம்ப்ரி, தனது காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் ஸ்பெயினின் பெட்ரோ மார்டினெஸை 6-2, 7-6 என்ற செட் கணக்கில் வென்றார்.
மற்றொரு ஆட்டத்தில் சுமித் நாகல், பிரிட்டனின் பிரைடன் கிலெய்னை 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் பிரஜனேஷ் கன்னேஸ்வரன் 6-2, 6-7(1), 6-1 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் மார்க் போல்மாஸை வீழ்த்தினார்.
முந்தைய சுற்றில் அவர் போட்டித் தரவரிசையில் 6-வது இடத்தில் இருந்த பிரிட்டனின் எவான் கிங்கை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றிருந்தார். இதன்மூலம், புணே ஓபனில் எவானிடம் கண்ட தோல்விக்கு பிரஜனேஷ் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் பிரஜனேஷ் கன்னேஸ்வரன் - ராம்குமார் ராமநாதன் இணை தனது முதல் சுற்றில் 6-2, 6-2 என்ற செட் கணக்கில் மற்றொரு இந்திய இணையான சூரஜ் பிரபோத் - நிதின் குமாரை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
