Bangalore Open ATP Challenger India Yuki Bhambri - Sumit Nagal Semifinal

பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் இந்தியர்களான யுகி பாம்ப்ரி - சுமித் நாகல் அரையிறுதியில் மோதுகின்றனர்.

பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்லோவேனியாவின் பிளேஸ் காவ்சிச் மற்றும் சுமித் நாகல் மோதினர்.

இதில், 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பிளேஸ் காவ்சிச்சை வீழ்த்தினார் சுமித் நாகல்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் யூகி பாம்ப்ரி சக நாட்டவரான பிரஜனேஷ் கன்னேஸ்வரனுடன் மோதி அவரை 7-5, 6-2 என்ற செட் கணக்கில் வென்றார்.

அதன்படி, அரையிறுதியில் இந்தியர்களான யுகி பாம்ப்ரி - சுமித் நாகல் மோதுகின்றனர்

இதனிடையே, மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் சீன தைபேவின் சங் ஹுவா யாங் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் பிரான்ஸின் ஆன்டணி எஸ்கோஃபியரை வீழ்த்தினார்.

மேலும், ஒரு காலிறுதியில் குரோஷியாவின் ஆன்டே பாவிச்சை 6-2, 4-6, 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்திய பிரிட்டனின் ஜேய் கிளார்க், அரையிறுதியில் சங் ஹுவா யாங்கை எதிர்கொள்கிறார்.