இந்தியாவுக்கு எதிரான ஐந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகளில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டிகள் வரும் செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 13 வரை நடைபெறவுள்ளது.

ஒரு நாள் போட்டிகள் சென்னை, பெங்களூரு, நாகபுரி, இந்தூர், கொல்கத்தா ஆகிய நகரங்களிலும், டி20 போட்டிகள் ஹைதராபாத், ராஞ்சி, குவாஹாட்டி ஆகிய நகரங்களிலும் நடைபெறவுள்ளன.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

“இந்தியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான ஜேம்ஸ் ஃபாக்னர், நாதன் கோல்ட்டர் நீல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஆல்ரவுண்டர்கள் ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

ஒரு நாள் போட்டி அணியின் விவரம்:

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் ஃபாக்னர், ஆரோன் ஃபிஞ்ச், ஜோஷ் ஹேஸில்வுட், டிராவிஸ் ஹெட், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட்,ஆடம் ஸம்பா.

டி20 அணியின் விவரம்: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர் (துணை கேப்டன்), ஜேசன் பெஹ்ரன்டிராஃப், டேன் கிறிஸ்டியான், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஆரோன் ஃபிஞ்ச், டிராவிஸ் ஹெட், மோசஸ் ஹென்ரிக்ஸ், கிளன் மேக்ஸ்வெல், டிம் பெய்ன், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸம்பா.