Australian team declares first Test match in Bangladesh



வங்கதேசத்துக்கு எதிரான இரு டெஸ்ட் போட்டிகளில் விளையாடும் 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கதேச மண்ணில் முதல்முறையாக ஆஸ்திரேலியா விளையாடுகிறது எனபது குறிப்பிடத்தக்கது.

அந்த அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் காயம் காரணமாக இடம்பெறவில்லை.

அதேநேரத்தில் சுழற்பந்து வீச்சாளர் ஸ்டீபன் ஓகீஃப் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக 2-ஆவது சுழற்பந்து வீச்சாளராக ஆஷ்டன் அகர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அணி ஆகஸ்ட் 18-ஆம் தேதி வங்கதேசம் சென்றடைகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 27-ஆம் தேதி டாக்காவிலும், 2-ஆவது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 4-ஆம் தேதி சிட்டகாங்கிலும் தொடங்குகிறது.

இந்த டெஸ்ட் போட்டி 2015-ஆம் ஆண்டு நடைபெற வேண்டியது. ஆனால் அப்போது வங்கதேசத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருவதாகவும், அதனால் அங்கு செல்ல வேண்டாம் எனவும் ஆஸ்திரேலிய அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்துஅந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இப்போது அங்கு நிலைமை சீரடைந்ததைத் தொடர்ந்து ஆகஸ்டில் அங்கு சென்று விளையாடவுள்ளது ஆஸ்திரேலியா.

வங்கதேச மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது ஆஸ்திரேலியா.

ஆஸ்திரேலியா அணி விவரம்:

ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், மட் ரென்ஷா, உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மேக்ஸ்வெல், ஹில்டன் கார்ட்ரைட், மேத்யூ வேட், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் பட்டின்சன், ஜோஷ் ஹேஸில்வுட், நாதன் லயன், ஆஷ்டன் அகர்.