மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், தொடர் 1-1 என சமநிலை அடைந்துள்ளது. நாளை மெல்போர்னில் தொடங்கும் மூன்றாவது போட்டிதான் தொடர் முடிவை தீர்மானிக்கும் போட்டி என்பதால் இரு அணிகளுமே வெற்றி பெறும் முனைப்பில் உள்ளன. 

நாளை போட்டி தொடங்க உள்ள நிலையில், இரு அணிகளுமே ஆடும் லெவன் வீரர்களை அறிவித்துள்ளது. இந்திய அணி தொடர்ந்து சொதப்பிவரும் தொடக்க வீரர்கள் ராகுல் மற்றும் முரளி விஜயை நீக்கிவிட்டு மயன்க் அகர்வால் மற்றும் ரோஹித் சர்மாவை சேர்த்துள்ளது. அதேபோல இரண்டாவது போட்டியில் ஆடிய உமேஷ் யாதவிற்கு பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலிய அணி ஒரே ஒரு மாற்றம் செய்துள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் சோபிக்க தவறிய ஹேண்ட்ஸ்கம்ப்பை நீக்கிவிட்டு மிட்செல் மார்ஷை மீண்டும் அணியில் சேர்த்துள்ளனர். பாகிஸ்தானுக்கு எதிராக சரியாக ஆடாததால் மிட்செல் மார்ஷ் இந்திய அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் நீக்கப்பட்டிருந்தார். 

ஹேண்ட்ஸ்கம்ப் முதல் இரண்டு போட்டிகளில் சரியாக ஆடாததை அடுத்து மிட்செல் மார்ஷ் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஹேண்ட்ஸ்கம்ப் இரண்டு போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ்களிலும் பேட்டிங் ஆடி வெறும் 68 ரன்கள் மட்டுமே எடுத்ததால் அவரை நீக்கிவிட்டு மிட்செல் மார்ஷை அந்த அணி மீண்டும் சேர்த்துள்ளது. 

ஆஸ்திரேலிய அணி:

ஆரோன் ஃபின்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், டிம் பெய்ன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஹேசில்வுட்.