Asianet News TamilAsianet News Tamil

நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு.. இந்தியாவை வீழ்த்த இவங்க போதும்!! கெத்து காட்டும் ஆஸ்திரேலியா

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து நீண்ட தொடரில் ஆட உள்ளது. 
 

australian team announced for t20 series against india
Author
Australia, First Published Nov 10, 2018, 12:06 PM IST

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் முடிந்ததும் இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து நீண்ட தொடரில் ஆட உள்ளது. 

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி, 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடப்பதால் டி20 தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வில் இருக்கும் கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலிய தொடருக்கு வந்துவிடுவார். கோலி தலைமையிலான இந்திய அணியில் ரோஹித் சர்மா, தவான், ராகுல், மனீஷ் பாண்டே, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, உமேஷ் யாதவ், கலீல் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர், ஆஷஸ் தொடர், உலக கோப்பை ஆகியவற்றை கருத்தில்கொண்டு அந்த நட்சத்திர வீரர்களுக்கு டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

australian team announced for t20 series against india

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ், ஸ்பின் பவுலர் நாதன் லயன், பீட்டர் சிடில் ஆகிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி:

பின்ச்(கேப்டன்), அலெக்ஸ் கேரி, ஆஷ்டன் அகர், கிளென் மேக்ஸ்வெல், ஜேசன், கிறிஸ் லின், நாதன் குல்டர்நைல், பென் மெக்டெர்மோட், டேர்சி ஷார்ட், பில்லி ஸ்டேன்லேக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஆண்ட்ரூ டை, ஆடம் ஸம்பா. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios