Australian Super Series Indian players in progress

ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர்கள் காஷ்யப், ஸ்ரீகாந்த் ருத்விகா ஷிவானி கட்டே ஆகியோர் பிரதான சுற்றுக்கு முன்னேறினர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆஸ்திரேலிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் முதல் இரண்டு தகுதிச் சுற்றுகள் நேற்று நடைப்பெற்றது.

இதன் முதல் தகுதிச் சுற்றில் இந்திய வீரர் காஷ்யப், சீனாவின் ஸாவ் ஜன்பெங்குடன் மோதினார்.

இதில், 21-15, 21-18 என்ற செட் கணக்கில் காஷ்யப் வெற்றிப் பெற்று அசத்தினார்.

இரண்டாவது தகுதிச்சுற்றில் ஜப்பானின் கஸூமாஸா சகாயை எதிர்கொண்ட காஷ்யப், 21-5, 21-16 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வென்றார்.

இதனையடுத்து, காஷ்யப் தனது பிரதான சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான கொரியாவின் சன் வான் ஹோவுடன் மோதுகிறார்.

இதேபோல், மற்றொரு இந்திய வீரரும், இந்தோனேஷிய சாம்பியனுமான கே.ஸ்ரீகாந்த் தனது பிரதான சுற்றில் சீன தைபேவின் கான் சாவ் யுவை எதிர்கொள்கிறார்.

இதனிடையே, பிரதான சுற்றுக்கு நேரடியாகத் தகுதிபெற்ற ஹெச்.எஸ்.பிரணாய் அந்தச் சுற்றில் இங்கிலாந்தின் ராஜீவ் ஒளவ்செப்பை சந்திக்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி கட்டே 21-15, 21-15 என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் சில்வினா குர்னியாவனை வீழ்த்தினார்.

அடுத்து சுற்றிலும் அதே நாட்டைச் சேர்ந்த ருவின்டி செராசிங்கேவை 21-9, 21-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரதான சுற்றுக்கு முன்னேறினார் ருத்விகா.

பிரதான சுற்றில் அவர் சீனாவின் சென் ஜியாஜினை இன்று எதிர்கொள்கிறார்.