Australian Open Tennis Semi final Roger Federer - Hion Chung ...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரும், தென் கொரியாவின் ஹியோன் சங்கும் மோதுகின்றனர்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் காலிறுதி ஒன்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், போட்டித் தரவரிசையில் 19-வது இடத்தில் இருந்த செக் குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார்.

இந்த ஆட்டத்தின் முடிவில் நடப்புச் சாம்பியனான ஃபெடரர் 7-6(7/1), 6-3, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார்.

மெல்போர்னில் இதுவரை தாமஸ் பெர்டிச்சை 5 முறை சந்தித்துள்ள ஃபெடரர், அனைத்திலுமே வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் தென் கொரியாவின் ஹியோன் சங் 6-4, 7-6(7/5), 6-3 என்ற செட்களில் அமெரிக்காவின் டென்னைஸ் சேன்ட்கிரெனை வென்றார்.

இரண்டு காலிறுதி போட்டிகளிலும் வெற்றிப் பெற்ற ரோஜர் ஃபெடரரும், ஹியோன் சங்கும் அடுத்து அரையிறுதியில் மோத உள்ளனர்.