Australian Open tennis Rohan Bopanna - T. pabose pair up for next round
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியாவின் டி.பாபோஸ் ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ஹங்கேரியா வீராங்கனை டி.பாபோஸ் இணை அமெரிக்காவின் வனியா கிங்-குரோஷியாவின் ஃபிராங்கோ ஜோடியுடன் நேற்று மோதியது.
விரு விறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் நடைபெற்ற 4-வது சுற்று ஆட்டத்தில் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில், வனியா கிங் - குரோஷியாவின் ஃபிராங்கோ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது ரோஹன் போபண்ணா - டி.பாபோஸ் ஜோடி.
அதேபோன்று மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, 6-0, 6-7 (3-7), 6-2 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் சி.எஸ்.நவாரோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆஸ்திரேலியன் ஓபன் காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், 3-6, 6-3, 6-7 (5-7), 6-2, 2-0 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் மரீன் சிலிச் வெற்றி பெற்றார். நடால் காயம் காரணமாக விலகியதால் மரின் அரையிறுதிக்கு முன்னேறினார்.
