Australian Open Super Series Srikanth PV Sindhu Saina Naval Progress ...

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், பி.வி.சிந்து, சாய்னா நெவால் உள்ளிட்டோர் அடுத்த சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆஸ்திரேலிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் முதல் சுற்றில் ஸ்ரீகாந்த் மற்றும் சீன தைபேவின் கன் ஜாவ் யூ மோதினர். இதில், 21-13, 21-16 என்ற நேர் செட்களில் சீன தைபேவின் கன் ஜாவ் யூவை வீழ்த்தினார் ஸ்ரீகாந்த்.

அடுத்த சுற்றில் ஸ்ரீகாந்த், தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் சாய் பிரணீத் 10-21, 21-12, 21-10 என்ற செட் கணக்கில் இந்தோனேசியாவின் டாமி சுகியார்டோவை வீழ்த்தி வென்றார்.

சாய் பிரணீத் அடுத்த சுற்றில் சீனாவின் ஹுயாங் யூக்ஸியாங்கை சந்திக்கிறார்.

மகளிர் ஒற்றையர் முதல் சுற்றில் சாய்னா நெவால் 21-10, 21-16 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் இருந்த தென் கொரியாவின் சங் ஜி ஹியூனை தோற்கடித்து வென்றார்.

சாய்னா அடுத்த சுற்றில் மலேசியாவின் சோனியாவை எதிர்கொள்கிறார்.

பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் 21-17, 14-21, 21-18 என்ற செட் கணக்கில் ஜப்பானின் சயாக்கோ சாட்டோவை தோற்கடித்தார்.

சிந்து அடுத்த சுற்றில் சீனாவின் ஜியாவ்ஸின்னுடன் மோதுகிறார்.

மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி ஜோடி தங்களின் முதல் சுற்றில் 21-11, 21-13 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் ஸயன் யூ - ஜெனிபர் ஜோடியைத் தோற்கடித்து 2-ஆவது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.\.