Australian cricketers salary hike of Rs .7.32 crore

உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் வீரர், வீராங்கனைகளுக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் சம்பளத்தை அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் இணையதளத்தில் வெளியிட்டப்பட்ட அறிவிப்பு:

“புதிய சம்பள உயர்வின்படி, சர்வதேச போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் சம்பளமானது ரூ.7.32 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இந்த சம்பளம், போட்டி சம்பளம், செயல்பாட்டு ஊக்கத் தொகை, பிக் பாஷ் லீக் போட்டிக்கான தொகை என அனைத்தும் உள்ளடக்கியதே.

உள்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கான ஆண்டு சம்பளம் ஐந்து மடங்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சர்வதேச மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளுக்கான சம்பளம் சுமார் 125 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்படுகிறது” என்றும் அந்த அறிவிப்பில் வெளியிடப்பட்டு உள்ளது.

சம்பள ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் சேர்க்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.