Australia will continue to increment the Indian players

ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான ஆண்டு ஊதியத்தை பிசிசிஐ அதிகரித்துள்ளது.

கோலி, தோனி ஆகியோரின் ஆண்டு ஊதியம் ரூ.2 கோடியாக உயர்ந்துள்ள நிலையில், ஊதிய பட்டியலில் சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் மற்றும் கெளதம் கம்பீர் ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிசிசிஐ நிர்வாகக் குழு நேற்று வெளியிட்ட சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்பு:

’ஏ' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.1 கோடியில் இருந்து, ரூ.2 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.

’பி' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.1 கோடியாகவும், ’சி' கிரேடு வீரர்களுக்கான ஊதியம் ரூ.50 இலட்சமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.

டெஸ்ட் போட்டிகளுக்கான ஊதியம் ரூ.7.50 இலட்சத்தில் இருந்து இருமடங்காக உயர்த்தி ரூ.15 இலட்சமாக உயர்த்தப்பட்டது.

ஒருநாள் போட்டிக்கான ஊதியம் ரூ.6 இலட்சமாகவும், டி20 போட்டிக்கான ஊதியம் ரூ.3 இலட்சமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய ஊதியம், 2016 அக்டோபர் 1-ஆம் தேதி முதலாக அமல்படுத்தப்பட்ட உள்ளன.

மூன்று கிரேடுகளில் உள்ள 32 வீரர்களுக்கு இந்த ஊதிய உயர்வு, தேசிய தேர்வுக் குழுவுடனான ஆலோசனைக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ளது.