பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பகலிரவு போட்டியான இது, ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் வியாழக்கிழமை தொடங்கியது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர்-ரென்ஷா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 23.1 ஓவர்களில் 70 ஓட்டங்கள் சேர்த்தது. வார்னர் 32 ஓட்டங்களில் வெளியேற, பின்னர் வந்த கவாஜா 4 ஓட்டங்களில் நடையைக் கட்டினார்.

இதையடுத்து ரென்ஷாவுடன் இணைந்தார் கேப்டன் ஸ்மித். சிறப்பாக ஆடிய இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 76 ஓட்டங்கள் சேர்த்தது. ரென்ஷா 71 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, ஹேண்ட்ஸ்காம்ப் களம்புகுந்தார். இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது.

தொடர்ந்து அசத்தலாக ஆடிய ஸ்மித் 184 பந்துகளில் சதமடித்தார். முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ஓட்டங்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 110, ஹேண்ட்ஸ்காம்ப் 64 ஓட்டங்கடன் களத்தில் உள்ளனர்.

பாகிஸ்தான் தரப்பில் முகமது ஆமிர், யாசிர் ஷா, வஹாப் ரியாஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.