Australia declate 442 run

இங்கிலாந்திற்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 442 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்துள்ளது.

இங்கிலாந்திற்கு எதிரான 2-வது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 149 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 442 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அந்த அணியில் ஷான் மார்ஷ் 15 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 126 ஓட்டங்கள், நாதன் லயன் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடிலெய்டில் சனிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணியில் பேன்கிராஃப்ட் 10 ஓட்டங்கள், வார்னர் 47 ஓட்டங்கள், கவாஜா 53 ஓட்டங்கள், ஸ்மித் 40 ஓட்டங்கள், ஹேன்ட்ஸ்காம்ப் 36 ஓட்டங்கள், பெய்ன் 57 ஓட்டங்கள், ஸ்டார்க் 6 ஓட்டங்கள், கம்மின்ஸ் 44 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஓவர்டன் 3 விக்கெட்கள், பிராட் 2 விக்கெட்கள், ஆன்டர்சன், கிறிஸ் வோக்ஸ் தலா ஒரு விக்கெட் என வீழ்த்தி அசத்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கியுள்ள இங்கிலாந்து நேற்றைய ஆட்டநேர முடிவில் 9.1 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 29 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அலாஸ்டர் குக் 11 ஓட்டங்கள், ஜேம்ஸ் வின்ஸ் ஓட்டங்கள் இன்றி ஆடி வருகின்றனர். ஸ்டோன்மேன் 18 ஓட்டங்களில் வீழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.