தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 221 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா, முதல் இன்னிங்ஸில் 136.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 488 ஓட்டங்கள் குவித்திருந்தது.  அதில், அதிகபட்சமாக எய்டன் மார்க்ரம் 152 ஓட்டங்கள் அடித்தார். 

ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக பேட்ரிக் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் 70 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது.
 
ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கேப்டன் டிம் பெய்ன் 62 ஓட்டங்கள், உஸ்மான் கவாஜா 53 ஓட்டங்கள், பேட்ரிக் கம்மின்ஸ் 50 ஓட்டங்கள் எடுத்தனர். 

தென் ஆப்பிரிக்க தரப்பில் பிலாண்டர், ரபாடா, கேசவ் மஹராஜ் தலா 3 விக்கெட்டுகளும், மோர்ன் மோர்கெல் ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதனையடுத்து முதல் இன்னிங்ஸில் 267 ஓட்டங்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா, 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியுள்ளது. 

மூன்றாம் நாளான நேற்றைய் முடிவில் அந்த அணி 56 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டீன் எல்கர் 39 ஓட்டங்கள், கேப்டன் டூ பிளெஸ்ஸிஸ் 34 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.