Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான 3-வது நாள் ஆட்டம் இன்று…

australia --south-africa-between-the-3rd-day-of-the-gam
Author
First Published Nov 26, 2016, 11:54 AM IST


அடிலெய்டு,

ஆஸ்திரேலியா – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடியெல்டு நகரில் பகல்–இரவு மோதலாக தொடங்கியது.

முதலில் பேட் செய்த தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 259 ஓட்டங்களுடன் திடீரென ‘டிக்ளேர்’ செய்தது.

கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ் 118 ஓட்டங்கள் விளாசினார். அடுத்து தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா தொடக்க நாள் முடிவில் 12 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 2–வது நாளான நேற்று தொடர்ந்து பேட் செய்த ஆஸ்திரேலிய அணி ஆட்ட நேர இறுதியில் 102 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 307 ஓட்டங்கள் குவித்தது. 5–வது சதத்தை பூர்த்தி செய்த உஸ்மான் கவாஜா 138 ஓட்டங்களுடனும் (285 பந்து, 12 பவுண்டரி), மிட்செல் ஸ்டார்க் 16 ஓட்டங்களுடனும் (50 பந்து) களத்தில் இருக்கிறார்கள். கேப்டன் ஸ்டீவன் சுமித் (59 ரன்), ஹேன்ட்ஸ்கோம்ப் (54 ரன்) அரைசதம் அடித்தனர். இது தென்ஆப்பிரிக்காவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 48 ஓட்டங்கள் அதிகமாகும்.

மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios