Asianet News TamilAsianet News Tamil

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டம் இன்று; புது  தலைமையில் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா...

Australia - Englands first match today Australia new leadership
Australia - Englands first match today Australia new leadership
Author
First Published Jun 13, 2018, 10:21 AM IST


இலண்டனில், ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது.

இங்கிலாந்துக்குச் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதலாவது ஒரு நாள் போட்டி இலண்டன் ஓவலில் இன்று நடைபெறுகிறது. 

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த ஸ்டீவன் சுமித், துணை கேப்டனாக இருந்த டேவிட் வார்னர் ஆகியோருக்கு ஓராண்டு விளையாட தடை விதிக்கப்பட்டது. தலைமை பயிற்சியாளர் டேரன் லீமான் ராஜினாமா செய்தார் என்பது அனைவரும் அறிந்ததே.

அதன்படி, ஆஸ்திரேலிய அணிக்கு புதிய கேப்டனாக டிம் பெய்னும், பயிற்சியாளராக ஜஸ்டின் லாங்கரும் நியமிக்கப்பட்டனர். அதன்பிறகு உலக சாம்பியன் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கும் முதல் தொடர் இதுதான். 

புதிய தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி எப்படி விளையாடப்போகிறது? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. 

காயத்தால் முன்னணி பந்து வீச்சாளர்கள் மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெறவில்லை என்பது வருத்தமே. 

அந்த அணி துணை கேப்டன் ஆரோன் பிஞ்ச், மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோரின் பேட்டிங்கைத்தான் நம்பி இருக்கிறது அந்த அணி.

ஒரு நாள் போட்டி தரவரிசையில் முதலிடம் வகிக்கும் இங்கிலாந்து அணி, இந்த தொடரை பறிகொடுத்தால் ‘நம்பர் ஒன்’ இடத்தை இழக்க வேண்டி இருக்கும் என்பதால் அதை தக்க வைக்க கடுமையாக போராடுவார்கள். 

காயத்தால் அவதிப்படும் ஆல்-ரௌண்டர்கள் பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார்கள். ஆனாலும் பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், அலெக்ஸ் ஹாலெஸ் அதிரடியில் மிரட்ட காத்திருக்கிறார்கள்.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios