Australia - Bangladesh clashes today

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் லண்டனில் இன்று ஆஸ்திரேலியாவும், வங்கதேசமும் மோதுகின்றன.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலண்டனில் இன்று நடக்கும் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், வங்கதேசமும் (ஏ பிரிவு) மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவுகு ஸ்டீவன் சுமித்தும், வங்கதேசத்திற்கு மோர்தசாவும் தலைமை தாங்குகின்றனர்.

ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக விளையாடி அதில் மழையால் தோல்வியில் இருந்து தப்பித்து தலா ஒரு புள்ளியை பகிர்ந்து கொண்டது.

வங்காளதேச அணி தனது தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக தமிம் இக்பாலின் சதத்தின் துணையுடன் 305 ஓட்டங்கள் குவித்த போதிலும் தோல்வியை சந்தித்தது.

இவ்விரு அணிகளும் இதுவரை 19 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி உள்ளன. அதில் 18-ல் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் வங்காளதேசமும் வெற்றி பெற்றுள்ளன.

இன்றைய ஆட்டத்தில் தோற்றால் வெளியேற வேண்டியதுதான். அதனால் இரு அணி வீரர்களும் முழுமூச்சுடன் விளையாடுவார்கள் என்று நம்பலாம்.

இந்திய நேரப்படி மாலை 6 மணிக்கு இந்தாட்டம் தொடங்கும்.