உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை குவித்துள்ளது. 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களத்தில் இறங்க உள்ளது.

உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடரின் இந்தியா இங்கிலாந்து அணிகளிடையேயான இறுதி போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய உற்சாகத்துடன் இந்திய அணி, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று களமிறங்கி விளையாடி வருகிறது.

ஏற்கனவே 2005ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய அணி முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் விளையாடி வருகிறது.

முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 228 ரன்களை குவித்துள்ளது.

229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய மகளிர் அணி களத்தில் இறங்க உள்ளது.