ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டிகள்… 5 மணி நேரம் போராடி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் நடால்…

ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற, ஸ்பெயின் வீரர் ரபேல் நடால், இறுதிப் போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரருடன் மோத உள்ளார்.

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது.

விறு, விறுப்பான இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அரையிறுதியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசை பட்டியலில் 9வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீரர் ரபேல் நடால் மற்றும் தரவரிசை பட்டியலில் 15வது இடத்தில் உள்ள பல்கோரியா வீரர் டிமிட்ரோ ஆகியோர் மோதினர்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் 6-3, 5-7, 7-6, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் பல்கோரியா வீரரை 5 மணி நேரம் போராடி தோற்கடித்த ரபேல் நடால் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

இதைடுத்து, நாளை நடைபெறும் இறுதிப் போட்டியில், 18 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்ற சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரருடன் மோத உள்ளார்.