Asian Marathon Championship Gold for the First Time

பதினாறாவது ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் கோபி தொனகல் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்று இப்போட்டியில் தங்கம் வெல்லும் முதல் இந்திய ஆடவர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

பதினாறாவது ஆசிய மாரத்தான் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடைப்பெற்றது. இப்போட்டியில் பந்தய தூரத்தை 2 மணி 15 நிமிடம் 48 விநாடிகளில் கடந்து இந்தியாவின் கோபி தொனகல் முதலிடம் பிடித்தார்.

உஸ்பெகிஸ்தானின் ஆன்ட்ரே பெட்ரோவ் 2 மணி 15 நிமிடம் 51 விநாடிகளில் வந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

மங்கோலியாவின் பியாம்பலேவ் செவின்ராவ்தன் 2 மணி 16 நிமிடம் 14 விநாடிகளில் எட்டி மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

கேரள மாநிலம் வயநாட்டைச் சேர்ந்த கோபி, இந்தாண்டு புதுடெல்லி மாரத்தான் போட்டியில் முதலிடம் பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெற்றி குறித்து கோபி, "இந்தப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்ல முழு முயற்சி செய்வேன்' என்றார்.