ஆசிய கோப்பை வில்வித்தையின் 'ஒன்றாம் நிலை' போட்டியில் இந்தியா மூன்று தங்கங்கள், இரண்டு வெண்கலங்கள் என ஐந்து பதக்கங்கள் வென்று அசத்தியுள்ளது.

ஆசிய கோப்பை வில்வித்தையின் 'ஒன்றாம் நிலை' போட்டியில் மகளிருக்கான தனிநபர் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் பிரமிளா டெய்மேரி 7-3 என்ற கணக்கில் ரஷியாவின் நடாலியா எர்டைனீவாவை வீழ்த்தி தங்கம் வென்றார். 

அதேபோன்று ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆகாஷ், கோரா ஹோ, கெளரவ் லம்பே அணி  27-26 என்ற கணக்கில் மங்கோலிய அணியை வீழ்த்தி தங்கம் வென்றது.

மகளிருக்கான தனிநபர் காம்பவுண்ட் பிரிவில் இந்தியாவின் முஸ்கான் கிரார் 139-136 என்ற கணக்கில் மலேசியாவின் நதிரா ஜகாரியா சஸாதுலை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

இதேபோல, மது வேத்வான் 6-5 என்ற கணக்கில் மங்கோலியாவின் அல்டாங்கெரல் எங்துயாவை வீழ்த்தி வெண்கலம் வென்றார். 

மகளிர் காம்பவுண்ட் அணிகள் பிரிவில் முஸ்கான் கிரார் - திவ்யா தயால் - மிருனாள் ஹிவ்ராலே ஆகியோர் அடங்கிய இந்திய அணி 227-221 என்ற கணக்கில் இந்தோனேஷிய அணியை வீழ்த்தி வெண்கலம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.