Asianet News TamilAsianet News Tamil

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை: 2-வது வெற்றியை ருசித்தது இந்திய பெண்கள் அணி...

Asian Champions Trophy Indian Women Team second victory
Asian Champions Trophy Indian Women Team second victory
Author
First Published May 17, 2018, 11:04 AM IST


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய பெண்கள் அணி 2-வது வெற்றியை ருசித்தது. 

ஐந்து அணிகள் பங்கேற்றுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை பெண்கள் ஹாக்கி போட்டி தொடர் தென்கொரியாவின் டோங்கா சிட்டியில் நடந்து வருகிறது. 

இதில், நேற்று நடந்த 2-வது லீக் ஆட்டம் நடைப்பெற்றது. இதில், உலக தரவரிசையில் 10-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி மற்றும் 8-வது இடத்தில் உள்ள சீனா மோதின.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் சீனாவை வீழ்த்தி 2-வது வெற்றியை கைப்பற்றியது. 

இந்திய அணியில் வந்தனா 4-வது மற்றும் 11-வது நிமிடங்களில் கோல் அடித்தார். குர்ஜித் கௌர் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடித்தார். 

இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா - மலேசியா அணிகள் மோதுகின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios