Asian champions hockey Indian women team win over Japan

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை மகளிர் ஹாக்கி போட்டி கொரியாவின் டோங்கே நகரில் நடந்து வருகின்றன. 

இதில், நடப்புச் சாம்பியனான இந்தியா தொடக்க ஆட்டத்தில் ஜப்பானை எதிர்கொண்டது. ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது ஆதிக்கத்தை செலுத்தியது இந்தியா. ஜப்பான் அணியின் தற்காப்பை பலமுறை இந்திய வீராங்கனைகள் நொறுக்கினர்.

துரிதமாக பந்தை கடத்திய இந்திய அணிகள் பெரும்பாலான நேரம் பந்தை தங்கள் வசமே வைத்திருந்தனர். கேப்டன் சுனிதா லக்ரா தற்காப்பு ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார்.

இளம் முன்கள வீராங்கனையான நவ்நீத் கெளர் 7, 25, 55-வது நிமிடங்களில் ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். ராணி ராம்பால் இல்லாத நிலையிலும் இந்திய மகளிர் அணி திறமையாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

ஜப்பான் அணிக்கும் தொடர்ச்சியாக 2 பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தும் அதை கோலாக்க முடியவில்லை. 58-வது நிமிடத்தில் ஜப்பானின் அகி யமடா ஒரு கோல் அடித்தது ஆறுதலாக இருந்தது. 

வரும் 16-ஆம் தேதி அடுத்த ஆட்டத்தில் சீனாவை எதிர்கொள்கிறது இந்தியா.