Asian Athletics Championship India is first place with 7 medals including 2 golds
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் பதக்கப்பட்டியலில் இந்தியா இரண்டு தங்கங்கள் உள்பட ஏழு பதக்கங்கள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் - 22 ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவருக்கான 5000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லஷ்மணன் 14 நிமிடம் 54.48 நொடிகளில் பந்தைய தூரத்தை எட்டி தங்கத்தை வென்று அசத்தினார்.
அவருக்கு அடுத்தபடியாக கத்தாரின் யாசர் சலேம் வெள்ளியும், செளதி அரேபியாவின் தாரிக் அகமது வெண்கலமும் வென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் சொக்குராணி கிராமத்தைச் சேர்ந்த வீரரான லஷ்மணன் “எப்போதும் ஓரு சிறந்த ஓட்டப் பந்தய வீரனாகவும், கடின உழைப்பாளியாகவுமே இருக்க விரும்புகிறேன். அதன் பலனாகவே தற்போது தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது” என்று வெற்றிக் குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.
இந்த வெற்றியின் மூலமாக, இலண்டனில் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு லஷ்மணன் தகுதிப் பெற்றுள்ளார்.
இதனிடையே, சாம்பியன்ஷிப் போட்டியின் 2-வது நாளான நேற்று இந்தியாவுக்கு நான்கு தங்கங்கள் கிடைத்தது.
இதில் மகளிர் 400 மீ. ஓட்டத்தில் இந்தியாவின் நிர்மலா ஷியோரன் தங்கம் வென்றார்.
அதேபோல், ஆடவர் 400 மீ. பிரிவில் முகமது அனாஸ் தங்கத்தை தட்டிச் சென்றார்.
மகளிருக்கான 1500 மீ. ஓட்டத்தில் பி.யு.சித்ரா தங்கம் வென்றார்.
ஆடவருக்கான 1500 மீ. ஓட்டத்தில் அஜய் குமார் சரோஜும் தங்கம் வென்றார்.
தற்போதைய பதக்கப் பட்டியலில் இந்தியா இரண்டு தங்கங்கள் உள்பட 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
