சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நியூசிலாந்த் அணிக்கு எதிராக இந்திய அணி 3-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியது. இந்த 3 டெஸ்ட் போட்டிகளில் இந்திய சுழல் பந்து வீச்சே காரணமாக அமைந்திருந்தது. சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின், 3 போட்டிகளில் பந்து வீசி 27 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.

இந்த நிலையில், சர்வதேச டெஸ்ட் தரவரிசைப் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது. இந்த பட்டியலில் 900 புள்ளிகளுடன் அஸ்வின் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இரண்டாவது இடத்தை தென் ஆப்பிரிக்காவின் ஸ்டெயின் பெற்றுள்ளார். இவர் 878 புள்ளிகள் பெற்றுள்ளார். இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 870 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். 4-வது, 5-வது இடங்களில் இங்கிலாந்து வீரர் பிராட், இலங்கை வீரர் ஹெராத் இடம் பிடித்துள்ளனர். 

37 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று 200 விக்கெட்டுகளை அதிவேகமாக வீழ்த்திய சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின், சிறந்த ஆல் ரவுண்டரும் ஆவார்.