Arindar Chandu advanced to the quarterfinals of Victoria Open Squash ...
விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் அரிந்தர் சாந்து அசத்தலாக ஆடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
விக்டோரியா ஓபன் ஸ்குவாஷ் போட்டி ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியில் அரிந்தர் சாந்து தனது இரண்டாவது சுற்றில் கத்தாரின் சயீத் அஸ்லான் அம்ஜெத்துடன் மோதினார்.
இதில், 11-5, 11-7, 11-7 என்ற நேர் செட்களில் சயீத் அஸ்லான் அம்ஜெத்தை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார் அரிந்தர்.
அரிந்தர் சாந்து தனது காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் ரைஸ் டெளலிங்கை எதிர்கொள்கிறார்.
கடந்த வாரம் நடைபெற்ற தெற்கு ஆஸ்திரேலிய ஓபன் இறுதி ஆட்டத்தில் இதே டெளலிங்கை வீழ்த்திதான் அரிந்தர் சாந்து சாம்பியன் பட்டம் வென்றார் என்பது கொசுறு தகவல்.
