Aravarat in Kovilpatti on May 5 national hockey tournament starts with
கோவில்பட்டியில் அகில இந்திய வலைகோல் பந்தாட்ட (ஹாக்கி) போட்டி மே 5-ஆம் தேதி ஆராவாரத்துடன் தொடங்கும் என்று கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் நேற்று செய்தியாளர்களிடம் கூறியது:
“கே.ஆர். மருத்துவம் மற்றும் கல்வி அறக் கட்டளையின் சார்பில், கே.ஆர். கல்வி நிறுவனங்கள், இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாதெமியுடன் இணைந்து லட்சுமி அம்மாள் நினைவுக் கோப்பைக்கான 9-ஆம் ஆண்டு அகில இந்திய ஹாக்கி போட்டியை நடத்த இருக்கிறது.
இந்தப் போட்டி மே மாதம் 5-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் ஆராவாரத்துடன் தொடங்கும்.
இப்போட்டியின் தொடக்க நிகழ்ச்சிக்கு கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.ராமசாமி தலைமையேற்று போட்டியை தொடங்கி வைக்கிறார்.
இந்தப் போட்டியில் ஆர்.சி.எப். கபுர்தாளா, கனரா வங்கி பெங்களூரு, ஆர்மி லெவன் பெங்களூரு, செளத் சென்ட்ரல் இரயில்வே செகந்தராபாத், ஓஎன்ஜிசி புதுதில்லி, இந்தியன் நேவி மும்பை, சென்ட்ரல் செகரெட்ரியேட் புதுதில்லி, இலட்சுமி அம்மாள் நினைவு ஹாக்கி அணி உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.
தினமும் காலை 6.30, மாலை 5 மணி, 6.30, இரவு 8 மணி என 4 போட்டிகள் நடைபெறும்.
இப்போட்டிகளைக் காண்பதற்காக கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து காலை 6 மணி மற்றும் மாலை 4.30 மணிக்கு இலவசமாக பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.
முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.1 இலட்சம், 2-ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.75 ஆயிரம், 3-ஆம் இடம் பெறும் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.50 ஆயிரம், 4-ஆவது இடம் பிடிக்கும் அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.30 ஆயிமும் பரிசு வழங்கப்படவுள்ளது” என்று அவர் கூறினார்.
