இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோலி தனது 28ஆவது பிறந்தநாளை ராஜ்கோட்டில் சகவீரர்களுடன் நேற்று கொண்டாடினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ரன் மெஷின், சேசிங் மாஸ்டர் என்றெல்லாம் ரசிகர்களால் அழைக்கப்படும் விராட் கோலி, இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக ராஜ்கோட்டில் பயிற்சி பெற்று வருகிறார். இதனால் சகவீரர்களுடன் தனது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார்.

இந்தநிலையில் விராத் கோலியின் தோழியாக ஊடகங்களால் வர்ணிக்கப்படும் அனுஷ்கா ஷர்மா, அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ராஜ்கோட் சென்றுள்ளார்.இருவரும் பிரிந்துவிட்டதாகக் கூறப்பட்ட நிலையில், விராத் கோலி பங்குதாரராக உள்ள கோவா எஃப்சி அணி விளையாடிய கால்பந்து போட்டியை இருவரும் இணைந்து ரசித்தது குறிப்பிடத்தக்கது.