இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது. அப்போது இங்கிலாந்துடன் இந்திய அணி விளையாடிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் டெஸ்டில் தோல்வியை தழுவியது. தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற இருக்கிறது. இதனிடையே இந்திய அணி இங்கிலாந்தில் உள்ள ”ஹை கமிஷன் ஆஃப் இந்தியா” சென்ற போது கேப்டன் கோலி அவரின் மனைவியும் பிரபல பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவையும் உடன் அழைத்து சென்றிருக்கிறார். 

கிரிக்கெட் விளையாடட சென்றிருக்கும் இந்திய வீரர்கள் கவனம் சிதறாமல் விளையாட வேண்டும் எனும் காரணத்தால், தங்கள் குடும்பத்தினரை அழைத்து வர தடை விதித்திருக்கிறது BCCI. ஆனால் விராட் கோலி அங்கு அனுஷ்கா ஷர்மாவை அழைத்து சென்றிருக்கிறார்.
மேலும் அங்கு இந்திய வீரர்கள் அணியாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்திலும் அனுஷ்கா ஷர்மா கோலியுடன் இடம் பெற்றிருக்கிறார். 

இணையத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தை பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் அது என்ன கோலிக்கு மட்டும் விதி விலக்கா? என கேள்வி எழுப்பி இருப்பதுடன், அனுஷ்கா மற்றும் கோலியை திட்டி வருகின்றனர்.