ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக்பேஷ் டி20 லீக் தொடரில் காமெடியான ரன் அவுட்டுகள், விசித்திரமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிய வண்ணம் உள்ளன. 

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி20 லீக் தொடர் நடந்துவருகிறது. இதில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் மெல்போர்ன் மற்றும் சிட்னி தண்டர்ஸ் அணிகள் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மெல்போர்ன் அணி, 20 ஓவர் முடிவில் 140 ரன்கள் எடுத்தன. 141 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய சிட்னி தண்டர்ஸ் அணி, 113 ரன்களுக்கே ஆல் அவுட்டானதால் 27 ரன்கள் வித்தியாசத்தில் மெல்போர்ன் அணி வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் சிட்னி தண்டர்ஸ் அணி இன்னிங்ஸில், 9வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து ஆடிய சந்து மற்றும் ஜோனாதன் குக் ஆகிய இருவரும் களத்தில் இருந்தபோது 19வது ஓவரை குர்னே வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தை சந்து எதிர்கொண்டார். அந்த பந்து அவரது காலில் பட்டு கீழே விழ, அதற்கு இருவரும் ரன் ஓடினர். ரன் அவுட் செய்வதற்காக ஓடிய பவுலர், இரு பேட்ஸ்மேன்களுக்கும் இடையில் புகுந்து ஓடியதால் இரண்டு பேட்ஸ்மேன்களும் நேருக்கு நேராக மோதிக்கொண்டதில் குக் நிலைதடுமாறி கீழே விழுந்ததால் ரன் அவுட்டானார். இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக நடப்பவை. அதிலும் அவர்கள் பவுலர்கள் என்பதால் பேட்டிங் ஆடும்போது சரியான புரிதலுடன் ஓடவில்லை. பவுலர் குறுக்கே ஓடியதால் கவனம் சிதறி நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.