Andy Murray is no longer a part of any competition

உலகின் இரண்டாம் நிலை வீரரான பிரிட்டனின் ஆன்டி முர்ரே காயம் காரணமாக இந்தாண்டில் இனிமேல் நடைபெற இருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அவர் ஏற்கன்வே தற்போது நடைபெற்றும் வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆன்டி முர்ரே வெளியிட்டுள்ள அறிக்கை:

“இடுப்பில் ஏற்பட்டுள்ள காயம் சில மாதங்களாக பிரச்சனையாக இருக்கிறது. கடந்த சில வாரங்களாக இடுப்பு சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் ஆலோசித்து வந்தேன். அதையடுத்து, எனது டென்னிஸ் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இந்த ஆண்டின் எஞ்சிய அனைத்து போட்டிகளில் இருந்தும் விலக முடிவு செய்துள்ளேன்.

எனவே, பெய்ஜிங், ஷாங்காய், வியன்னா, பாரீஸில் நடைபெறும் போட்டிகளில் என்னால் பங்கேற்க இயலாது. இந்த ஓய்வுக்குப் பிறகு காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து, மீண்டும் டென்னிஸில் சிறந்த இடத்தை பிடிப்பேன் என்று உறுதியாக நம்புகிறேன்.

2018-ஆம் ஆண்டு சீசனை பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியிலிருந்து தொடங்க உள்ளேன்” என்று ஆன்டி முர்ரே தெரிவித்தார்.