Asianet News TamilAsianet News Tamil

ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதன்முறை!! அனைத்து அணிகளுக்கும் இந்திய கேப்டன்கள்?

all ipl teams may have indian captains
all ipl teams may have indian captains
Author
First Published Mar 26, 2018, 5:35 PM IST


கடந்த 2008ம் ஆண்டு ஐபிஎல் தொடங்கப்பட்டது. 10 தொடர்கள் பிரமாண்டமாக நடத்தப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுவிட்டன. 11வது சீசன் அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்குகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சூதாட்டப்புகார் காரணமாக விளையாடாமல் இருந்த சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் இந்த முறை களம் காண்கின்றன. தோனியின் தலைமையில் சென்னை அணி மீண்டும் களமிறங்குவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

இதுவரை சென்னை அணிக்கோ அல்லது தோனி இருக்கும் அணியிலோ விளையாடி வந்த தமிழக வீரர் அஸ்வின், இந்த முறை பஞ்சாப் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கவுதம் காம்பீரை இந்த முறை டெல்லி அணி எடுத்துள்ளதால், இதுவரை அவர் கேப்டனாக இருந்த கொல்கத்தா அணிக்கு தினேஷ் கார்த்திக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஐபிஎல் தொடரில் இரண்டு அணிகளுக்கு மட்டும்தான் வெளிநாட்டு வீரர்கள் கேப்டன்களாக செயல்பட இருந்தனர். இருவருமே ஆஸ்திரேலியர்கள். ராஜஸ்தான் அணிக்கு ஸ்மித்தும் ஹைதராபாத் அணிக்கு வார்னரும் கேப்டன்களாக இருந்தனர்.

all ipl teams may have indian captains

ஆனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில், ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தும் துணை கேப்டன் பதவியிலிருந்து வார்னரும் நீக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவருக்கும் வாழ்நாள் தடை விதிப்பது குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தின் எதிரொலியாக ராஜஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து ஸ்மித்தை நீக்கிவிட்டு ரஹானேவை கேப்டனாக நியமித்துள்ளது அந்த அணி.

இதையடுத்து ஹைதராபாத் அணியும் வார்னரை நீக்கிவிட்டு தவானை கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது. அப்படி தவான் நியமிக்கப்பட்டால், ஐபிஎல்-லின் எட்டு அணிகளுக்கும் இந்திய வீரர்கள் கேப்டன்களாக செயல்படுவர். இதுவரை எந்த ஐபிஎல் தொடரிலும் அனைத்து அணிகளுக்கும் இந்திய வீரர்களே கேப்டன்களாக செயல்பட்டது கிடையாது.

வார்னர் நீக்கப்பட்டு ஹைதராபாத் அணிக்கு தவான் கேப்டனாக நியமிக்கபட்டால், ஐபிஎல் அணிகள் மற்றும் கேப்டன்களின் பட்டியல்

1. சென்னை சூப்பர் கிங்ஸ் - தோனி

all ipl teams may have indian captains

2. மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா

all ipl teams may have indian captains

3. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - விராட் கோலி

all ipl teams may have indian captains

4. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஷிகர் தவான்

all ipl teams may have indian captains

5. ராஜஸ்தான் ராயல்ஸ் - அஜிங்கியா ரஹானே

all ipl teams may have indian captains

6. கிங்ஸ் லெவன் பஞ்சாப் - ரவிச்சந்திரன் அஸ்வின்

all ipl teams may have indian captains

7. டெல்லி டேர்டெவில்ஸ் - கௌதம் காம்பீர்

all ipl teams may have indian captains

8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - தினேஷ் கார்த்திக்


all ipl teams may have indian captains

Follow Us:
Download App:
  • android
  • ios