All Indian Wells Australian Open champion and Caroline Wozniaki fell to Russian veteran
ஆல் இன்டியன் வெல்ஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி, ரஷிய வீராங்கனையான டரியா கசாட்கினாவிடம் வீழ்ந்தார்.
ஆல் இன்டியன் வெல்ஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையான டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 4-6, 5-7 என்ற செட்களில், போட்டித் தரவரிசையில் 20-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் டரியா கசாட்கினாவிடம் தோற்றார்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் 6-1, 6-1 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் கரோலின் கார்சியாவை வென்றார்.
அதேபோன்று போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா 6-1, 7-6(7/2) என்ற செட்களில் அமெரிக்காவின் அமான்டா அனிசிமோவாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 7-6(8/6), 6-4 என்ற செட்களில் லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவை வீழ்த்தினார்.
அதேபோன்று ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி 3-வது சுற்றில் உலகின் 21-ஆம் நிலை வீரரான அமெரிக்காவின் சாம் கெர்ரியிடம் 7-6(7/4), 4-6, 4-6 என்ற செட்களில் வீழ்ந்தார்.
