ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சீன தைபேவின் டா ஸு யிங்கை சந்திக்கிறார். 

ஆல் இங்கிலாந்து பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் தனது முதல் சுற்றில் உலகின் முதல்நிலை வீராங்கனையான சீன தைபேவின் டா ஸு யிங்கை சந்திக்கிறார். 

உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா, கடந்த மாதம் நடைபெற்ற இந்தோனேஷிய ஓபனில் டாய் ஸுவிடம் கண்ட தோல்விக்கு இந்த ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுப்பார். 

சிந்து தனது முதல் சுற்றில் எளிதாக வெற்றி பெற வாய்ப்பு இருக்கும் நிலையில், தனது 2-வது சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கை சந்திக்க வாய்ப்புள்ளது. 

ஆடவர் பிரிவில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்ரீகாந்த் தனது முதல் சுற்றில் பிரான்ஸின் பிரைஸ் லெவெர்டெஸை எதிர்கொள்கிறார். 

மற்றொரு இந்தியரான சாய் பிரணீத், உலகின் முன்னாள் முதல்நிலை வீரரான தென் கொரியாவின் சன் வான் ஹோவை எதிர்கொள்கிறார். 

உலகின் 11-ஆம் நிலை வீரரான பிரணாய், போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் சீன தைபேவின் டோவ் டியென் சென்னுடன் முதல்சுற்றில் மோதுகிறார்.

ஆடவர் இரட்டையர் பிரிவில் சிரக் ஷெட்டி - சாத்விக்சாய்ராஜ் ஜோடி, ஜப்பானின் டகுரோ ஹோகி - யுகோ கொபாயாஷி இணையை எதிர்கொள்கிறது. 

மற்றொரு இணையான மானு அத்ரி - சுமீத் ரெட்டி இணை, இங்கிலாந்தின் மார்கஸ் எலிஸ்-கிறிஸ் லாங்கிரிட்ஜ் ஜோடியை சந்திக்கிறது.

மகளிர் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா - சிக்கி ரெட்டி இணை, போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஜப்பானின் மிசாகி மட்சுமோடோ - அயாகா டகாஹாஷி இணையுடன் மோதுகிறது.

கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா - சிக்கி ரெட்டி ஜோடி, ஜெர்மனியின் மார்வின் எமில் செய்டெல் - லின்டா எஃப்லர் இணையுடன்  மோதுகிறது.