Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சிட்டகாங்,

வங்காளதேசத்துக்கு சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன் முதலாவது டெஸ்ட் சிட்டகாங்கில் இன்று தொடங்குகிறது.

வங்காளதேச ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது என்பதால், இங்கிலாந்து அணி மொயீன் அலி, அடில் ரஷித், காரெட் பேட்டி ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்து கேப்டன் அலஸ்டயர் குக்குக்கு இது தனிப்பட்ட முறையில் மைல்கல் போட்டியாகும். தனது 134–வது டெஸ்டில் அடியெடுத்து வைக்கும் 31 வயதான அலஸ்டயர் குக், இதன் மூலம் இங்கிலாந்து வீரர்களில் அதிக டெஸ்டில் விளையாடிய வீரர் என்ற அரிய பெருமையை பெறுகிறார்.

இதற்கு முன்பு அலெக் ஸ்டூவர்ட் 133 டெஸ்டில் ஆடியதே சாதனையாக இருந்தது. காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்2 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.