Advanced players for the semi-final in Asian Youth Boxing ...

ஆசிய இளையோர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நவீன் பூரா அங்கித் ஆகியோர் அரையிறுதிச் சுற்றிற்கு முன்னேறி அசத்தினர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆசிய இளையோர் குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதியில் நேற்றைய 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் நவீன் பூரா, சீனாவின் ஹுவாங் ருயியுடன் மோதி வெற்றிக் கண்டார்.

நவீன் பூரா அரையிறுதியில் தாய்லாந்தின் பீராபத் இயாசங்னோனை எதிர்கொள்கிறார்.

மற்றொரு ஆட்டத்தில், இந்தியாவின் அங்கித் தனது காலிறுதிச் சுற்றின் 60 கிலோ எடை பிரிவில் கைர்ஜிஸ்தானின் அடிலெட் எகென்பெர்டி உலுவை வீழ்த்தினார்.

இவர் தனது அரையிறுதியில் சக்தா ருவாம்தம்மை எதிர்கொள்கிறார்.

இந்தியாவின் ஹர்ஷ்பிரீத் ஷெராவத் 91 கிலோவுக்கு மேலான எடைப் பிரிவில் அரையிறுதிக்கு நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார். அவர் தனது அரையிறுதியில் உஸ்பெகிஸ்தானின் முல்லோஜோனோவ் லாஸிஸ்பெக்கை சந்திக்கிறார்.

இந்த வகையில் இந்தியாவுக்கு இந்தப் போட்டியில் இதுவரை மூன்று பதக்கங்கள் உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.