ADP Challenger indain paiir advanced to next level
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் தைவான் இணையை வீழ்த்தி இந்தியாவின் திவிஜ் சரண் - ஸ்காட் லிப்ஸ்கி இணை ஆடவர் இரட்டையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறியது.
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் போட்டி தைவானில் நடைபெற்று வருகிறது. இதில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தியாவின் திவிஜ் சரண் - அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கி இணை தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தைவானின் வைல்டு கார்டு இணையான ஜுய் சென் ஹங் - செங் யு யுவுடன் மோதியது.
இதில், 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஜுய் சென் ஹங் - செங் யு யுவை வீழ்த்தி திவிஜ் சரண் - ஸ்காட் லிப்ஸ்கி இணை வெற்றி பெற்றது.
திவிஜ் சரண் - ஸ்காட் லிப்ஸ்கி இணை தனது காலிறுதியில் தைவானின் மற்றொரு வைல்டு கார்டு ஜோடியான யு சியு லு - டுங் லின் வுவை எதிர்கொள்கிறது.
