Acquired the silver medal in 12 seconds Bronze for India

ஜப்பானில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் நடைப் போட்டியில், இந்திய வீரர் கே.டி.இர்ஃபான் 12 நொடிகளில் பின்தங்கி வெள்ளியைத் தவறிவிட்டு வெண்கலத்தை வென்றார்.

ஆசிய சாம்பியன்ஷிப் நடைப் போட்டியில் ஜப்பானில் நடைபெற்றது. இதில், இந்திய வீரர் கே.டி.இர்ஃபான் கலந்து கொண்டார்.

கொரியாவைச் சேர்ந்த கிம் ஹியூன் சப் 1 மணி 19 நிமிடம் 50 நொடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

கஜகஸ்தானைச் சேர்ந்த ஜியார்ஜி ஷெய்கோ 1 மணி 20 நிமிடம் 47 நொடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

தேசிய சாதனைக்கு சொந்தக்காரரான இர்ஃபான், இந்தப் போட்டியில் பந்தய தூரமான 20 கி.மீட்டரை 1 மணி 20 நிமிடம் 59 நொடிகளில் கடந்து 3-ஆவது இடம் பிடித்தார்.

இந்த நிலையில், கடந்த மாதம் நடைபெற்ற தேசிய சாம்பியன்ஷிப் நடைப் போட்டியில் 1 மணி 22 நிமிடம் 43.38 நொடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தைப் பிடித்து, ஆகஸ்ட் மாதம் இலண்டனில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப்புக்கு இர்ஃபான் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, ஆசிய சாம்பியன்ஷிப் நடைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீராங்கனை பிரியங்கா, பந்தய தூரத்தை 1 மணி 37 நிமிடம் 42 நொடிகளில் கடந்து 4-ஆவது இடத்தைப் பிடித்தார்.