வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என இழந்தது. 

இதனையடுத்து முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. தொடர்ந்து இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. இந்திய அணியில் கலீல் அகமதுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார். இப்போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 81 ரன்கள் எடுத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் வேகமாக 10,000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். 

தவான் – ரோஹித் ஜோடி 29 ரன்கள் சேர்த்தால் இந்திய அணிக்கு அதிக ரன் குவித்த தொடக்க ஜோடிகள் பட்டியலில் 2-வது இடத்துக்கு முன்னேறுவர். இந்த மைதானத்தில் இந்திய அணி 2013-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.