Asianet News TamilAsianet News Tamil

முதல் டி20 போட்டி: ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்திய அணி இதுதான்!!

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

12 member indian squad announce for first t20 against australia
Author
Australia, First Published Nov 21, 2018, 10:00 AM IST

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடக்கிறது. முதல் போட்டி பிரிஸ்பேனில் இன்று மதியம் 1.20 மணிக்கு தொடங்குகிறது. 

இந்த போட்டியில் வென்று வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் தென்னாப்பிரிக்காவிடம் வாங்கிய அடிக்கு, இந்தியாவை வீழ்த்தி உத்வேகம் பெறும் முனைப்பில் உள்ளது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலிய அணியில் ஸ்மித்தும் வார்னரும் இல்லாதது இந்திய அணிக்கு கூடுதல் பலம்.

இந்நிலையில், விராட் கோலி தலைமையில் இந்த போட்டியில் ஆடும் 12 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. குருணல் பாண்டியா, ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கலீல் அகமது ஆகியோருக்கு 12 பேர் கொண்ட அணியில் இடம் கிடைத்துள்ளது. அதேநேரத்தில் ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. 

12 member indian squad announce for first t20 against australia

முதல் டி20 போட்டிக்கான 12 பேர் கொண்ட இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக்(விக்கெட் கீப்பர்), குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது, சாஹல்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios