டி20 உலக கோப்பை: மழையால் 9 ஓவர் போட்டி! தென்னாப்பிரிக்காவுக்கு எளிய இலக்கை நிர்ணயித்த ஜிம்பாப்வே

டி20 உலக கோப்பையில் மழையால் 9 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்ட போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணி, 9 ஓவரில் 79 ரன்கள் அடித்து 80 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்காவுக்கு நிர்ணயித்தது.
 

zimbabwe set 80 runs target in 9 overs for south africa in t20 world cup

டி20 உலக கோப்பையில் இன்று 2 சூப்பர் 12 போட்டிகள். இன்று நடந்த முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்தி வங்கதேச அணி வெற்றி பெற்றது. 2வது போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஜிம்பாப்வே அணிகள் ஆடிவருகின்றன.

ஹோபர்ட்டில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. மழை காரணமாக போட்டி 9 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 

தென்னாப்பிரிக்க அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரைலீ ரூசோ, எய்டன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், வைன் பர்னெல், கேஷவ் மஹராஜ், ககிசோ ரபாடா, அன்ரிக் நோர்க்யா, லுங்கி இங்கிடி.

ஜிம்பாப்வே அணி:

ரெஜிஸ் சகாப்வா (விக்கெட் கீப்பர்), கிரைக் எர்வின் (கேப்டன்), வெஸ்லி மாதவெரெ, சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, மில்டன் ஷும்பா, ரியான் பர்ல், லூக் ஜாங்வே, டெண்டாய் சடாரா, ரிச்சர்ட், ப்ளெஸ்ஸிங் முசாரபானி.

9 ஓவர் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜிம்பாப்வே அணியில் சகாப்வா(8), எர்வின் (2), சீன் வில்லியம்ஸ்(1), சிக்கந்தர் ராசா(0) ஆகிய நால்வருமே படுமோசமாக ஏமாற்றமளித்தனர். ஆனால் அதிரடியாக ஆடிய மாதவெர் 18 பந்தில் 35 ரன்கள் அடிக்க, 9 ஓவரில் 79 ரன்கள் அடித்தது ஜிம்பாப்வே. 9 ஓவரில் 80 ரன்கள் என்ற இலக்கை விரட்டுகிறது தென்னாப்பிரிக்கா.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios