இந்திய அணியில் கடந்த 2000ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் யுவராஜ் சிங், 2003, 2007, 2011 ஆகிய 3 ஒருநாள் உலக கோப்பை தொடர்களில் யுவராஜ் சிங் ஆடியுள்ளார். 2011 உலக கோப்பையை இந்திய அணி வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். அந்த உலக கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருதையும் யுவராஜ் தான் வென்றார். 2011 உலக கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளிலும் பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே யுவராஜின் பங்களிப்பு அளப்பரியது. 

அதேபோல ஒரே ஓவரில் 6 சிக்ஸர்கள் விளாசி அரிய சாதனையை நிகழ்த்திய யுவராஜ் சிங், 2007ல் டி20 உலக கோப்பையை இந்திய அணி வென்றபோதும் முக்கிய பங்காற்றினார். இந்திய அணிக்காக மிகப்பெரிய பங்காற்றியுள்ள யுவராஜ் சிங், கடந்த ஒன்றரை ஆண்டாக இந்திய அணியில் ஆடவில்லை. 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் யுவராஜ் ஆடியதுதான் கடைசி. அதன்பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

இந்திய அணியின் மாபெரும் சக்தியாக யுவராஜ் சிங் திகழ்ந்த காலத்தில் அதிகமான தொகைக்கு ஏலம்போன அவரை, இந்த சீசனில் அடிப்படை விலைக்குக்கூட எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜின் அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் என கடந்த சீசன் வரை 5 அணிகளுக்காக ஆடிய யுவராஜ் சிங்கை, இந்த சீசனில் எந்த அணியும் எடுக்க முன்வரவில்லை. இரண்டாம் கட்ட ஏலத்தில் யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

யுவராஜ் சிங்கின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்து மும்பை இந்தியன்ஸ் அணி அவரை எடுத்தது. இதையடுத்து ரோஹித் சர்மாவின் தலைமையின் கீழ் யுவராஜ் சிங் இந்த சீசனில் ஆட உள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி, ஐபிஎல்லில் யுவராஜ் சிங் ஆட உள்ள ஆறாவது அணி. கிங்ஸ் லெவன் பஞ்சாப், புனே வாரியர்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், ஆர்சிபி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 5 அணிகளில் யுவராஜ் சிங் ஆடிய யுவராஜ் சிங்கை இந்த சீசனில் அடிப்படை விலைக்குக்கூட எந்த அணியும் எடுக்கவில்லை. கடைசியாக ரூ.1 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி எடுத்தது. 

ஐபிஎல்லில் முதன்முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடுகிறார் யுவராஜ் சிங். இந்த சீசனில் அபாரமாக ஆட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார் யுவராஜ் சிங். மும்பை இந்தியன்ஸ் அணியின் சிக்கலாக இருக்கும் மிடில் ஆர்டரில் தான் சிறப்பாக ஆடி அந்த அணியின் சிக்கலை தீர்க்க உள்ளதாக ஏற்கனவே யுவராஜ் தெரிவித்துள்ளார். 

இந்த சீசனில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சியின் கீழ் யுவராஜ் சிங் ஆட உள்ளதைக் காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில், யுவராஜ் சிங்கை மும்பை இந்தியன்ஸ் அணியில் எடுத்தது ஏன் என்பது குறித்து அந்த அணியின் நிர்வாகியாக இருக்கும் ஜாகீர் கான் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய ஜாகீர் கான், யுவராஜ் சிங் அணிக்காக வெற்றியை தேடித்தரக்கூடிய திறன் பெற்றவர். அதனால் அவர் அணியில் இருப்பதே அணிக்கு ஒரு உத்வேகம். எங்கள் அணியின் மிடில் ஆர்டர் சிக்கலைத் தீர்க்க அனுபவம் வாய்ந்த ஒரு தேவை என்பதை உணர்ந்துதான் யுவராஜ் சிங்கை எடுத்தோம். மிடில் ஆர்டரில் யுவராஜ் சிங்கை விட சிறந்த வீரர் வேறு யாராக இருக்க முடியும் என்று தனது முன்னாள் சக வீரரான யுவராஜ் சிங்கை புகழ்ந்தார் ஜாகீர் கான்.