Asianet News TamilAsianet News Tamil

ஓய்வுக்கு பிறகும் யுவராஜ் சிங்கின் அடுத்தடுத்த அதிரடி.. ரசிகர்களுக்கு மற்றுமொரு இன்ப அதிர்ச்சி

ஓய்வுக்கு பிறகு கனடா டி20 லீக்கில் ஆடவுள்ள யுவராஜ் சிங், அடுத்ததாக தனது ரசிகர்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளார். 

yuvraj singh revealed his interest to play in euro t20 slam first season
Author
England, First Published Jun 26, 2019, 4:16 PM IST

இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்த யுவராஜ் சிங், கடந்த 10ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேனாகவும், சிறந்த ஆல்ரவுண்டராகவும் திகழ்ந்த யுவராஜ் சிங், 2007 டி20 உலக கோப்பை, 2011 ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை ஆகியவற்றை வென்ற இந்திய அணியில் முக்கிய பங்காற்றியவர். 

கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. ஆனால் ஐபிஎல்லில் ஆடிவந்தார். ஐபிஎல்லிலும் அவருக்கு முன்பைப்போல் பெரிய டிமாண்ட் இல்லாததால் கடந்த 10ம் தேதி சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் இருந்து ஓய்வு பெற்றார். 

இதனால் யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை இனிமேல் பார்க்க முடியாது என அவரது ரசிகர்கள் சோகத்தில் இருந்தனர். இந்நிலையில், கனடா டி20 லீக்கில் ஆடவுள்ளார் யுவராஜ். ஓய்வுபெற்ற பிறகு வெளிநாட்டு டி20 தொடர்களில் ஆட அனுமதி கோரி பிசிசிஐ-க்கு கடிதம் எழுதியிருந்தார் யுவராஜ் சிங். அவருக்கு பிசிசிஐ அனுமதி அளித்தது. 

yuvraj singh revealed his interest to play in euro t20 slam first season

இதையடுத்து கனடா டி20 லீக்கில் டொரண்டோ நேஷனல்ஸ் அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் யுவராஜ் சிங். இந்த அணியில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி பேட்ஸ்மேனுமான பிரண்டன் மெக்கலமும் உள்ளார். டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் முன்னணி வீரர்களில் ஒருவராக யுவராஜ் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே யுவராஜ் சிங்கின் ஆட்டத்தை கனடா டி20 லீக்கில் பார்க்கலாம் என்பதால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். 

டொரண்டோ நேஷனல்ஸ் அணியில் எடுக்கப்பட்ட பிறகு அதுகுறித்து வீடியோ ஒன்று வெளியிட்ட யுவராஜ் சிங், எனது மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என தெரிவித்து ரசிகர்களையும் டொரண்டோ நேஷனல்ஸ் அணி நிர்வாகத்தையும் உற்சாகப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், இந்த ஆண்டு தொடங்க உள்ள யூரோ டி20 ஸ்லாம் தொடரின் முதல் சீசனில் ஆடுவதற்கு யுவராஜ் சிங் ஆர்வம் தெரிவித்துள்ளதாக அந்த தொடரின் ஆலோசனை கமிட்டியில் உள்ள டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் வெளிநாட்டு தொடர்களில் ஆட பிசிசிஐ அனுமதிப்பதில்லை. யுவராஜ் சிங் ஓய்வு பெற்றுவிட்டதால் வெளிநாட்டு தொடர்களில் ஆட பிசிசிஐயிடம் அனுமதியும் பெற்றார். 

yuvraj singh revealed his interest to play in euro t20 slam first season

கனடா டி20 லீக்கில் யுவராஜ் ஆடுவதால் உற்சாகத்தில் இருந்த ரசிகர்கள், அவர் யூரோ டி20 ஸ்லாம் தொடரிலும் ஆட இருக்கும் செய்தியை கேட்டு மேலும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர். 

யுவராஜ் சிங் மாதிரியான ஒரு சிறந்த வீரர், புதிதாக தொடங்கப்படும் டி20 லீக்கில் ஆடுவது, அந்த தொடரை பிரபலப்படுத்துவதற்கும் விளம்பரம் செய்வதற்கும் வசதியாக அமையும்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios