அண்மையில் சர்வதேச கிரிக்கெட் மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் இருந்து ஓய்வு அறிவித்த யுவராஜ் சிங், பிசிசிஐயிடம் அனுமதி பெற்று கனடா டி20 லீக் தொடரில் ஆடிவருகிறார். 

கனடா டி20 லீக் தொடரில் ஆடும் டொரண்டோ நேஷனல்ஸ் அணியின் கேப்டனாக யுவராஜ் சிங் உள்ளார். ஐபிஎல்லில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக ஆடாமல் சொதப்பிய யுவராஜ் சிங், கனடா டி20 லீக்கில் அபாரமாக பேட்டிங் ஆடிவருகிறார். ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே அதிரடியாக ஆடமுடியாமல் திணறினார் யுவராஜ். ஆனால் கனடா டி20 லீக்கில் நல்ல ஃப்ளோவில் அதிரடியாக ஆடி ரன்களை குவித்துவருகிறார். 

பேட்டிங், ஃபீல்டிங்கில் மட்டுமல்லாமல் யுவராஜ் சிங் கேப்டன்சியிலும் அசத்திவருகிறார். இந்நிலையில், நேற்று மாண்ட்ரீயல் டைகர்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 137 ரன்கள் என்ற இலக்கை டொரண்டோ நேஷனல்ஸ் அணி விரட்டடியது. அப்போது ஐந்தாம் வரிசையில் பேட்டிங்கிற்கு வந்த யுவராஜ் சிங், ஃபவாத் அஹ்மது வீசிய கூக்ளியை ஸ்வீப் ஷாட் ஆடமுயலும்போது முதுகில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அதனால் அதன்பின்னர் பேட்டிங் ஆடாமல் உடனடியாக வெளியேறினார். எனினும் இலக்கு எளிதானது என்பதால் டொரண்டோ அணி இலக்கை எட்டி வென்றது.