உலக கோப்பை இறுதி போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்ததை அடுத்து, சூப்பர் ஓவர் போடப்பட்டது. அதுவும் டிராவில் முடிந்ததால், ஐசிசி விதிப்படி அதிக பவுண்டரி அடித்த அணி தான் வெற்றி என்பதால், இங்கிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. 

லண்டன் லார்ட்ஸில் இந்த போட்டி நடந்துகொண்டிருந்தபோது, நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின் போது, ஒரு பெண் திடீரென மைதானத்திற்குள் நுழைய முயன்றார். அவர் விட்டலி அன்சென்சார்டு(vitaly uncensored) என்ற ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் மைதானத்திற்குள் நுழைய முயன்றார். ஆனால் அவர் மைதானத்துக்குள் நுழைய முயல்வதை கண்டு சுதாரித்துக்கொண்ட காவலர்கள் அவரை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்றனர். 

ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அந்த பெண் மைதானத்திற்குள் நுழைய முயன்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் காவலர்கள் அவரை அலேக்காக தூக்கிச்சென்று அப்புறப்படுத்தினர். அந்த வீடியோ இதோ.. 

இதோபோன்று ஒரு சம்பவம் கால்பந்து போட்டி ஒன்றிலும் நடந்தது. இதே ஆபாச இணையதளத்தை விளம்பரப்படுத்தும் விதமாக பெண் ஒருவர் மைதானத்துக்குள் ஓடியது குறிப்பிடத்தக்கது.