இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் இரு அணிகளுமே தலா ஒரு வெற்றியை பெற்றதால் 1-1 என தொடர் சமனடைந்தது. 

தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட், மான்செஸ்டரில் இன்று தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, இங்கிலாந்து அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்துள்ளது. 

இங்கிலாந்து அணி இந்த போட்டியில் சாம் கரன் மற்றும் மார்க் உட் ஆகிய இருவரையும் நீக்கிவிட்டு, ஆண்டர்சன் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகிய இருவரையும் இறக்கும் என்பது தெரிந்த விஷயமே. அதையேதான், நமது ஏசியாநெட் தமிழின் உத்தேச இங்கிலாந்து அணியின் ஆடும் லெவன் கட்டுரையிலும் எழுதியிருந்தோம். தொடரை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட்.. 2 அதிரடி மாற்றங்களுடன் களமிறங்கும் இங்கிலாந்து அணி..! உத்தேச ஆடும் லெவன்

ஆனால் மற்றொரு மாற்றமும் செய்யப்பட்டிருக்கிறது. மூன்றாம் வரிசையில் இறங்கிவந்த ஜாக் கிராவ்லி நீக்கப்பட்டு ஓலீ போப் சேர்க்கப்பட்டிருக்கிறார். 

இங்கிலாந்து அணி:

ரோரி பர்ன்ஸ், டோமினிக் சிப்ளி, ஜோ ரூட்(கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், ஓலி போப், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், டோமினிக் பெஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அல்ஸாரி ஜோசஃப் நீக்கப்பட்டு கார்ன்வால் சேர்க்கப்பட்டுள்ளார். வேறு எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. 

வெஸ்ட் இண்டீஸ் அணி:

கிரைக் பிராத்வெயிட், ஜான் கேம்ப்பெல், ஷேய் ஹோப், ப்ரூக்ஸ், பிளாக்வுட், ரோஸ்டான் சேஸ், டௌரிச்(விக்கெட் கீப்பர்), ஜேசன் ஹோல்டர்(கேப்டன்), கார்ன்வால், கீமார் ரோச், கேப்ரியல்.